வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஒரே கிரகத்தின் சுற்றுவட்டபாதையில் 2 சூரியன்கள்- நாசா தகவல்

வாஷிங்டன் செப் 16- நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி ஒரு கிரகத்தை சுற்றி 2 சூரியன்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளது அங்கு யாரும் வாழும் சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கிரகத்திற்கு கெப்ளர்-16b பெயரிடப்பட்டு உள்ளது, இது சனி போன்ற ஒரு வாழ்வதற்கே உகந்ததல்லாமல் குளிர் மாபெரும் வாயு, உள்ள கிரகமாக கருதப்படுகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டுகள் இருக்கிறது. 2 நட்சத்திரங்கள் சுற்றி வரும்   கிரகங்கள் உள்ளன என கடந்த காலத்தில் கூறி இருந்தாலும், விஞ்ஞானிகள் முதன் முதலில் இதை இறுதி படுத்தி உள்ளனர்.அங்கு இரட்டை சூரிய அஸ்தமனம் இருப்பதை பார்க்கும் போது கெப்ளர்-16b வாழ்நாள் முடிவில் உள்ளது தெரிகிறது. கெப்ளர்-16b உள்ள இரண்டு சூரியன்கள் நம்ம சூரியனை விட சிறியவையாக உள்ளன. கிரகத்தின் ஒவ்வொரு 229 நாட்கள் 65மில்லியன் மைல் தொலைவில் (104மில்லியன் கிமீ) இரண்டு சூரியனின் பாதைகள் உள்ளன - வீனஸ் அதே சூரிய சுற்றுப்பாதையில் தான் சுற்றி வருகிறது. கெப்ளர் தொலைநோக்கி 2009 ல் தொடங்கப்பட்டது , பூமியை போன்ற கிரகங்கள் இந்த பால்வெளி உள்ளனவா என கண்டறிய வடிவமைக்கப்பட்டது. ஒருகிரகத்தில் இரண்டு சூரியன்கள் சுற்றி வருகின்றன எனபது உண்மையில் கெப்ளரின் மகத்தான் கண்டு பிடிப்புதான் இத்தகவல் ஜெர்னல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு 13 வயது மூத்த டிவி நடிகையுடன் தொடர்பு

லண்டன், டிச. 17-
இங்கிலாந்து அரச குடும்பம் செய்திகளுக்கு இலக்காவது காலம் காலமாய் நடந்து வருகிற ஒன்று. இளவரசர் சார்லசின் மூத்தமகன் இளவரசர் வில்லியம் காதல் சர்ச்சையில் சிக்கி விரைவில் அந்த காதல் திருமணத்தில் முடியப்போகிறது. தற்போது, வில்லியமின் தம்பி இளவரசர் ஹாரியும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நான்கு வருடங்களுக்கு முன் டி.வி நடிகையான டேவிஸ் என்ற பெண்மணியுடன் தொடர்பு இருந்ததாக செய்தி வெளியானது. அப்போது, அதனை அரச குடும்பம் மறுத்தது. செய்தி அறிந்த இளவரசரின் காதலியான செல்ஸி கொதித்துப்போனார். தற்போது, டிவி நடிகையின் குழந்தைகளை கவனித்து வந்த ஹெரீரோ என்பவர் தனது எஜமானியான டேவிஸோடு ஹாரிக்கு தொடர்பு இருந்ததாகவும் அவரை வெளியே அழைத்து செல்ல இளவரசர் தமது காரை அனுப்பியாதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டேவிஸ் ஹாரியைவிட 13 வயது மூத்தவர் என்பது குறிப்பிடதக்கது. வழக்கம் போல அரண்மனை வட்டாரங்கள் இந்த செய்தியையும் மறுத்து வருகின்றன. 17.12.2010 4.38 PM

வீக்கிலீக்ஸின் அசாஞ்சேவுக்கு கல்லூரி மாணவியுடன் தொடர்பு அடுத்த அதிரடி


லண்டன்,டிச. 17-
உலகின் வல்லரசு நாடுகளையே கலங்க வைத்து வருபவர் விக்கிலீக்ஸின் அசாஞ்சே. இவரை கலக்கத்துக்குள்ளாக்கும் ஒரு இணையதளம் உள்ளது. காக்கர் என்பது அதன் பெயர். இது வெளியிட்டுள்ள தகவல் என்ன தெரியுமா? ஏற்கனவே சுவீடனில் அவர் சந்தித்து வரும் அதே பிரச்சனை தான். கடந்த 2004-ல் ஆஸ்திரேலியாவில் 19 வயது கல்லூரி மாணவியோடு அவருக்கு இருந்த நட்பை இந்த இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. ஆதாரமாக அந்த பெண்ணுக்கும் இவருக்குமிடையேயான மின்னஞ்சல் தொகுப்பை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது