இங்கிலாந்து அரச குடும்பம் செய்திகளுக்கு இலக்காவது காலம் காலமாய் நடந்து வருகிற ஒன்று. இளவரசர் சார்லசின் மூத்தமகன் இளவரசர் வில்லியம் காதல் சர்ச்சையில் சிக்கி விரைவில் அந்த காதல் திருமணத்தில் முடியப்போகிறது. தற்போது, வில்லியமின் தம்பி இளவரசர் ஹாரியும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நான்கு வருடங்களுக்கு முன் டி.வி நடிகையான டேவிஸ் என்ற பெண்மணியுடன் தொடர்பு இருந்ததாக செய்தி வெளியானது. அப்போது, அதனை அரச குடும்பம் மறுத்தது. செய்தி அறிந்த இளவரசரின் காதலியான செல்ஸி கொதித்துப்போனார். தற்போது, டிவி நடிகையின் குழந்தைகளை கவனித்து வந்த ஹெரீரோ என்பவர் தனது எஜமானியான டேவிஸோடு ஹாரிக்கு தொடர்பு இருந்ததாகவும் அவரை வெளியே அழைத்து செல்ல இளவரசர் தமது காரை அனுப்பியாதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டேவிஸ் ஹாரியைவிட 13 வயது மூத்தவர் என்பது குறிப்பிடதக்கது. வழக்கம் போல அரண்மனை வட்டாரங்கள் இந்த செய்தியையும் மறுத்து வருகின்றன. 17.12.2010 4.38 PM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக